ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 4–12–19

04 டிசம்பர் 2019, 02:19 PM

இசைத்தோழன்!

(சென்ற வார தொடர்ச்சி...)

ராஜா­வுக்கு திரை­யு­ல­கில் நுழைந்த கால­கட்­டத்­தில்  பயன் கரு­தா­மல் உதவி செய்த டைரக்­டர் மாத­வன், சங்­கிலி முரு­கன், ஜி.கே. வெங்­க­டேஷ், பஞ்சு அரு­ணா­ச­லம் போன்­ற­வர்­க­ளி­டம் ராஜா வைத்­தி­ருந்த மரி­யாதை அவர் மிகப்­பெ­ரிய இசை­ய­மைப்­பா­ள­ரான பின்­ன­ரும் துளி­யும் குறை­ய­வில்லை. தன்­னி­டம் ஐந்து நிமி­டங்­கள் சந்­தித்து ஆத்­மார்த்­த­மாக பேசு­ப­வரை உடனே நண்­ப­ராக அங்­கீ­க­ரித்து விடு­வார். நல்ல நண்­பர்­களை தேர்ந்­தெ­டுக்க அவர் வைத்­தி­ருக்­கும் சோதனை இது­தான்.

* ஆன்­மிக சஞ்­சா­ரத்­தில் இருக்­கும் ராஜா ஒரு சம­யம் உல­கச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார். அந்த சுற்­றுப்­ப­ய­ணத்­தை­கூட தனக்கு மிக­வும் பிடித்த தனது மரி­யா­தைக்­கு­ரிய இசை மேதை­க­ளின் நினை­வி­டத்­துக்­குச் சென்று தரி­சித்து வரு­வ­தற்­கா­ன­தா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­டார். இதற்கு அவ­ரு­டன் இருந்து உத­வி­ய­வர் சிங்­கப்­பூர் தமி­ழர் ஒரு­வர்.

* ஒரு சம­யம் பாடகி எஸ். ஜானகி ஒரு மூன்று வயது பெண் குழந்­தையை இளை­ய­ரா­ஜா­வி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ‘இந்த குழந்தை பக்­திப்­பா­டல்­களை அரு­மை­யா­கப் பாடும்’ என்­றார் ஜானகி. அந்த குட்­டிப் பாட­கியை தமக்கு முன்­னால் உள்ள மேஜை­யின் மேல் நிற்க வைத்து பாடச் சொல்­கி­றார் ராஜா. பாடிய குழந்­தை­யின் குர­லில் தேவ­கா­னம். உட்­கார்ந்­தி­ருந்த ராஜா எழுந்து நின்று பாடல் முடி­யும் வரை கூப்­பிய கரங்­க­ளு­டன் குழந்­தையை வணங்­கி­ய­படி நின்­றி­ருந்­தார் ராஜா.

* ‘நிறை­கு­டம் தளும்­பாது’ என்­பார்­கள். இளை­ய­ராஜா தன்­னைப் பற்­றிய சரா­ச­ரி­க­ளின் விமர்­ச­னங்­களை எப்­போ­தும் பொருட்­ப­டுத்­த­மாட்­டார். ஆனால், மேதை­க­ளின் தவ­றான விமர்­ச­னம் கண்­டால் வருத்­தம் கொள்­வார். ஒரு வார இத­ழில் ராஜா­வின் இசையை மிகக் கடு­மை­யா­கக் குறை கூறி­யி­ருந்­தார் இசை விமர்­ச­கர் சுப்­புடு. அதைக் கண்ட ராஜா அடுத்த வாரமே சுப்­பு­டு­வை­வி­டக் கிண்­ட­லா­க­வும் ஆதா­ரத்­தோ­டும் மறுப்பு எழு­தி­னார். சுப்­புடு அதற்கு மறுப்பு எது­வும் எழு­த­வில்லை.

*  இன்று உல­க­மெங்­கும் இசை வேள்வி நடத்­திக் கொண்­டி­ருக்­கும் இசைப்­பு­யல் ஏ.ஆர். ரஹ்­மான் ஆரம்ப காலத்­தில் இளை­ய­ரா­ஜா­வின் இசைக்­கு­ழு­வில் கீபோர்ட் வாசித்­த­வர். ராஜா­வின் மேல் தனி மரி­யாதை கொண்­ட­வர். ஒரு சம­யம் அவ­ரி­டம் ஒரு பத்­தி­ரி­கை­யா­ளர் ரஹ்­மா­னின் வாழ்க்கை வர­லாற்றை தொட­ராக ஒரு வார இத­ழில் எழு­து­வ­தற்கு கேட்­டா­ராம்.

அதற்கு ரஹ்­மான் சொன்ன பதில்: ‘‘முத­லில் இளை­ய­ரா­ஜா­வின் வாழ்க்கை வர­லாற்றை எழு­துங்­கள். அவர் மிகப்­பெ­ரிய ஜீனி­யஸ். தமிழ் சினி­மாத்­து­றை­யில் அவ­ரது இசை மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பு. அவ­ரது வாழ்க்கை வர­லாறு வரட்­டும். பிறகு நம்ம விஷ­யம் பற்றி பேசு­வோம்” என்­றா­ராம்.

* இளை­ய­ரா­ஜா­வின் இசைத்­தோ­ழன் யார் தெரி­யுமா?  அவ­ரு­டன் சிறு­வ­யது முதல் இருக்­கும் ஹார்­மோ­னி­யம்­தான். மதுரை பொன்­னையா ஆசா­ரி­யால் செய்­யப்­பட்ட அந்த ஹார்­மோ­னி­யம், ராஜா­வின் உணர்­வு­களை உள்­வாங்கி, இசை­யாக எதி­ரொ­லிக்­கி­றது. இந்த இசை பந்­தம் இன்­ன­மும் தொடர்­கி­றது.