தோழர் பழகி கொண்டேன்!

29 நவம்பர் 2019, 03:11 PM

இயக்குனர்  பா. ரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்தவர், ஆனந்தி. இப்போது ரஞ்சித் தயாரித்துள்ள அடுத்த படமான, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திலும் அவர் நடித்துள்ளார். ரஞ்சித் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இதில் தினேஷ் ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி கூறியதாவது:– ‘‘ரஞ்சித்தின் நீலம் புரொடக்க்ஷன்ஸ், என் சொந்த கம்பெனி மாதிரி. அவர் அழைத்தால், எந்த படமாக இருந்தாலும் கதை கேட்காமல் நடிப்பேன். காரணம், அந்தளவுக்கு அவர் தயாரிக்கும் படத்திலும், இயக்கும் படத்திலும் கதை வலுவாக இருக்கும். சமூகத்துக்கு தேவையான கருத்துகள் இருக்கும்.  அதில் நடித்தது பற்றி பெருமையாக இருக்கும்.  படப்பிடிப்பில் ஒருவரை ஒருவர் தோழர் என்று அழைத்ததை  பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. பாதுகாப்பு உணர்வையும் தந்தது. நானும்  மற்றவர்களை தோழர் என்று அழைக்க பழகிக்கொண்டேன். ‘பரியேறும் பெருமாள்’ போல், ‘குண்டு’ படமும் எனக்கு நல்ல பெயர் கொடுக்கும்’’ என்றார்.