நெகிழ்ச்சி!

29 நவம்பர் 2019, 03:09 PM

எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஏ. மோகன், ‘தனி மனிதன்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அவரது மனைவி வரலட்சுமி மோகன், திருக்குறள் போதிக்கும் அறம்  மற்ற இலக்கியங்களிலும் இருப்பதை ஆராய்ந்து, ‘வேலியற்ற வேதம்’ என்ற நுால் எழுதியுள்ளார். இது குறித்து அவர்களின் மகனும், நடிகருமான ‘ஜெயம்’ ரவி கூறுகையில், ‘‘நடிகனாக, இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த அப்பா மோகன், எடிட்டராகி விட்டார். இப்போது அவரது கனவை எனது அண்ணன் மோகன் ராஜாவும், நானும் நிறைவேற்றி இருக்கிறோம். அப்பா எழுதிய ‘தனி மனிதன்’,  அம்மா வரலட்சுமி மோகன் எழுதிய ‘வேலியற்ற  வேதம்’ ஆகிய புத்தகங்களை, சென்னை  வாணி மஹால் அரங்கில், வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியிடுகிறோம்’’ என்றார். மோகன் ராஜா உடனிருந்தார்.