இப்போது லேட்டாக வருவதில்லை!

29 நவம்பர் 2019, 03:07 PM

எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கியுள்ள 75வது படம், ‘கேப்மாரி.’ ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா,  சித்தார்த் விபின் நடித்துள்ளனர். இசை, சித்தார்த் விபின். வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து ஜெய் கூறியதாவது:–

‘‘இதற்கு முன் எப்போதோ ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு லேட்டாக சென்றிருக்கலாம். அதை வைத்து, எப்போதுமே ஜெய் லேட்டாகத்தான் வருவார் என்று சொல்வது என்ன நியாயம்? இப்போது எல்லா படத்தின் ஷூட்டிங்கிற்கும் சரியான நேரத்துக்கு சென்று வருகிறேன்.

‘கேப்மாரி,’ எனக்கு  25வது படமாக அமைந்துள்ளது. வைபவி சாண்டில்யாவுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். அவருக்கும், எனக்குமான கெமிஸ்ட்ரி அபாரமாக  ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஷூட்டிங்கில் நாங்கள் நடித்த சில காட்சிகள் சரியாக அமையாதபோது, ‘ரீடேக் எடுங்கள் சார்’ என்று டைரக்டர் எஸ்.ஏ.சியிடம் கேட்டிருக்கிறேன்’’ என்றார்.