மகனுக்காக அம்மா தயாரித்துள்ளார்!

29 நவம்பர் 2019, 03:05 PM

டாக்டர். அலெக்ஸ் சினிமாவில் நடிக்க விரும்பினார். மகனின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த அவரது அம்மா அனிதா, அவரது அருள் கம்பெனி மூலம் தயாரித்துள்ள படம், ‘எதிர்வினையாற்று.’ அலெக்ஸ் ஹீரோவாக நடித்ததுடன், தனது நண்பர் இளமைதாசுடன்  இணைந்து இயக்கியுள்ளார்.

சனம் ஷெட்டி, ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளனர். அலெக்ஸ் கூறுகையில், ‘‘டாக்டராக இருந்த நீ எப்படி நடிகனாக மாறினாய் என்று கேட்டார்கள். எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஈர்ப்பு உண்டு. இரவு, பகலாக உழைத்து 24 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்தேன்’’ என்றார்.