26 நவம்பர் 2019, 06:48 PM
ஜி.வி. பிரகாஷின் ‘புரூஸ்லீ’ என்ற படத்தில் நாயகியாக நடித்த கிரித்தி கர்பந்தா தான் ஒரு முன்னணி நடிகரை காதலித்து வருவதாக ஓப்பனாக பேட்டி கொடுத்துள்ளார். ‘பகல் பந்தி’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த புல்கிட் சாம்ராட் என்பவரைத்தான் கிரித்தி காதலிக்கிறாராம். பல நடிகைகள் சொந்த வாழ்க்கையை பற்றி பேசவே பயப்படும் நிலையில் தற்போது கிரித்தி வெறும் ஐந்தே மாதங்களில் காதலை அதிரடியாக மீடியாவிடம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.