திருநங்கையாக மீண்டும் நடிக்க வேண்டும்!

26 நவம்பர் 2019, 06:45 PM

விஜய் ஸ்ரீ இயக்­கத்­தில், ‘தாதா 87’ படத்­தில், திரு­நங்­கை­யாக நடித்து கவ­னத்தை ஈர்த்­த­வர், ஸ்ரீ பல்­லவி. தற்­போது, புதிய படங்­கள் சில­வற்­றில் நடித்து வரும் இவர், திரு­நங்­கை­யர் குறித்து சொல்­லும்­போது, ‘‘இப்­போ­தும் பல­ரி­டம், தவ­றான நம்­பிக்­கை­கள் உள்­ளன. சில ஆண்­கள் வேண்­டு­மென்றே, பெண்­ணைப் போல் நடந்து கொள்­கின்­ற­னர். அவர்­கள் தங்­களை, திரு­நங்­கை­யர் என நினைக்­கின்­ற­னர். ஆனால், அது உண்­மை­யல்ல. ஆண், பெண் என்­பது போல், மூன்­றாம் பாலி­ன­மான திரு­நங்­கை­யும், பிறப்­பி­லேயே தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. அவர்­களை சரி­ச­ம­மாக நடத்த வேண்­டும். இந்த விழிப்­பு­ணர்வு சமு­தா­யத்­தில் ஏற்­ப­டு­வ­தற்­காக, மீண்­டும் மீண்­டும் திரு­நங்­கை­யாக நடிக்க விரும்­பு­கி­றேன்’’ என்­றார்.