ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 27–11–19

26 நவம்பர் 2019, 06:42 PM

மூக்கு நுழைத்தால் பிடிக்காது!

(சென்ற வார தொடர்ச்சி...)

ராஜா­வுக்கு மூன்று குழந்­தை­கள். மகன்­கள் கார்த்­தி­கே­யன், யுவன், பவ­தா­ரிணி. மூவ­ருக்­கும் இசை­யில் அதீ­த­மான ஈடு­பாடு. பியானோ, வய­லின், வீணை ஆகிய இசைக்­க­ரு­வி­களை இனி­மை­யாக இசைப்­பார்­கள். இந்த மூவ­ரும் இன்று இசை­ய­மைப்­பா­ளர்­கள். இதில் யுவன் தந்­தை­யின் பெயர் சொல்­லும் பிள்­ளை­யாக முன்­ன­ணி­யில் இருக்­கி­றார்.

* முன்­பெல்­லாம் கிடார், தபேலா கலை­ஞர்­கள் உத­வி­யு­டன் ஹார்­மோ­னி­யத்தை இசைத்து டியூன் உரு­வாக்­கு­வார். அதற்­குப் பிறகு ஹார்­மோ­னி­யத்­தில் வாசித்­துப் பார்ப்­ப­தில்லை. கண்­களை மூடி சிந்­திப்­பார். இசை வடி­வங்­கள் அவர் மூளை எனும் கம்ப்­யூட்­ட­ரில் இருந்து புறப்­ப­டு­கின்­றன. அவற்றை அப்­ப­டியே இசைக் குறிப்­பு­க­ளாக எழு­தி­வி­டு­வார். ஹார்­மோ­னி­யம் இல்­லா­மல் இசை­ய­மைக்­கும் இந்த ஆற்­றல், இந்­திய சினிமா இசை­ய­மைப்­பா­ளர்­க­ளில் இவ­ரி­டத்­தில் மட்­டுமே இருக்­கி­றது என்­பது பிர­மிப்­பான உண்மை.

* இளை­ய­ரா­ஜா­வி­டம் ஒரு வழக்­கம். அவர் யாரோடு பேசி­னா­லும் யாருக்­கும் கை கொடுக்க மாட்­டார். அதற்கு பின்­ன­ணி­யில் சென்­டி­மெண்ட் இருப்­ப­தாக ஒரு முன்­னணி இயக்­கு­ந­ரின் கமெண்ட்.

* இசைக் குறிப்­பு­களை ஒத்­தி­கைக்­காக உத­வி­யா­ள­ரி­டம் அனுப்­பு­வார். சிறிது நேரம் தியா­னம் செய்­வார். பிறகு நல்ல பாட­கர்­களை பக்­திப் பாடல்­கள் பாடச் சொல்­லிக் கேட்டு ரசிப்­பார்.

* ராஜா தான் இசை­ய­மைத்த படங்­க­ளின் வெள்­ளி­விழா அல்­லது நுாறா­வது நாள் விழாக்­க­ளில் கலந்து கொள்­ள­மாட்­டார். முன் ரொம்ப பிசி­யாக இருந்­த­தால் செல்­வ­தில்லை. வீட்­டில் ஷீல்டு வைப்­ப­தற்­கென தனி­யறை வைக்­க­வில்லை.

* இளை­ய­ரா­ஜா­வுக்கு இசை சம்­பந்­த­மான புத்­த­கங்­கள் படிப்­பது ரொம்ப பிடிக்­கும். அது மட்­டு­மல்ல, சினிமா தொழில்­நுட்­பம் சார்ந்த புத்­த­கங்­க­ளை­யும் விரும்­பிப் படிப்­பார். சினிமா கலை­ஞர்­க­ளில் அதி­கப் புத்­த­கங்­கள் படிக்­கும் மிகச் சில­ரில் ராஜா­வும் ஒரு­வர். சமீ­ப­கா­ல­மாக ரம­ண­ரின் நுால்­களை விரும்­பிப் படிக்­கி­றார். ரம­ண­ரின் தத்­து­வங்­க­ளில் அதிக ஈடு­பாடு கொண்­டி­ருக்­கி­றார்.

* கதை, கவிதை, கட்­டுரை எழுத வேண்­டும் என்­ப­தில் நிறைய ஆர்­வம் கொண்­ட­வர் ராஜா. மந்­திர தந்­தி­ரக் கதை­கள் எழு­த­வும் படிக்­க­வும் இளை­ய­ரா­ஜா­வுக்கு மிக­வும் இஷ்­ட­மா­னது. தன்­னைப் பற்­றிய மற்­றும் இசை சார்ந்த விஷ­யங்­கள் குறித்த புத்­த­கங்­கள் சில எழு­தி­யி­ருக்­கி­றார்.

* இளை­ய­ரா­ஜா­வுக்­குப் புகைப்­ப­டக் கலை­யில் ஆர்­வம் உண்டு. பென்­சில் டிரா­யிங் படம் வரை­வ­துண்டு. தம்மை மாறு­பட்ட கோணங்­க­ளில் பிறர் எடுத்த வித்­தி­யா­ச­மான புகைப்­ப­டங்­களை வாங்­கிப் பத்­தி­ரப்­ப­டுத்தி வைத்­துக் கொள்­வார். தற்­போது தன்­னைப் புகைப்­ப­டம் எடுப்­ப­தைத் தவிர்த்­து­வி­டு­கி­றார்.                                                                                                                             தாம் கிளிக் செய்த இயற்கை காட்சி, சுவாமி படங்­களை வீட்­டில் மாட்டி வைத்­தி­ருக்­கி­றார்.

* இளை­ய­ராஜா சில நேரங்­க­ளில் இசைக்­கூ­டத்­தில் ஜாலி மூடில் இருந்­தால், ஜோக் அடிப்­பார். அது மென்­மை­யான ஜோக்­காக இருக்­கும். ஆனால், உடன் இருப்­ப­வர்­கள் சிரிக்­க­மாட்­டார்­கள். புன்­னகை புரி­ய­வும் தயங்­கு­வார்­கள். கார­ணம் மரி­யாதை.

* இளை­ய­ரா­ஜாவை இன்­றும் ‘வாடா’, போடா’ என்று ஏக வச­னத்­தில் கூப்­பி­டும் உரிமை பெற்­ற­வர்­க­ளில் முதன்­மை­யா­ன­வர்­கள் பார­தி­ராஜா, இசை­ய­மைப்­பா­ளர் ஜி.கே. வெங்­க­டேஷ், பாட­கர் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்.

* ராஜா­வி­டம் ஒரு பழக்­கம். தன் தொழி­லில் மூக்கு நுழைத்­தால் பிடிக்­காது. ஒரு படத்­தின் இசைப்­ப­ணி­யில் அவர் முழு­மை­யாக ஈடு­பட்­டி­ருக்­கும்­போது தேவை­யற்ற யோச­னை­க­ளால் தமது வேலை­யைக் கெடுக்­கி­றார் படத்­தின் டைரக்­டர் என்று தோன்­றி­னால், கோபத்­தில் ‘கெட் அவுட்’ என்று கண்­டிப்­பா­கச் சொல்லி விடு­வார். சுதந்­தி­ர­மாக இசை­ய­மைப்­ப­து­தான் ராஜா­வுக்­குப் பிடிக்­கும்.

* திரு­வண்­ணா­மலை விசிறி சாமி­யார், சேலம் மாயம்மா போன்ற மகான்­க­ளைத் தரி­சிப்­பார். உயி­ரும் உணர்­வு­முள்ள ஞானி­க­ளின் முன்­னால் மவு­ன­மாக அமர்ந்­தால் மனம் சாந்­தம் பெறு­கி­றது என்­பது அவர் அனு­ப­வம்.

* இசைப்­ப­ணிக்­குக் கால்­ஷீட் கொடுப்­ப­தில் பார­பட்­சம் பார்க்க மாட்­டார். அண்­ணன் பாஸ்­கர் ஆனா­லும், தம்பி கங்கை அம­ரன் பட­மாக இருந்­தா­லும் வரிசை முறைப்­ப­டி­தான் தேதி தரு­வார். ஆனால், ஒரே ஒரு முறை ஒரு பெண்­ம­ணி­யின் சிபா­ரிசு கார­ண­மாக சங்­கிலி முரு­கன் படத்­துக்கு அடுத்த நாளே கால்­ஷீட் கொடுத்­தார். சிபா­ரிசு செய்த அந்த பெண்­மணி சின்­னத்­தாயி அம்­மாள், இளை­ய­ரா­ஜா­வின் அம்மா.