சிபிக்கு கமல் நாயகி ஜோடி!

05 நவம்பர் 2019, 04:52 PM

‘ஜாக்சன் துரை’, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கி வரும் படம் ‘கபடதாரி’. இந்த படத்தில் சிபிராஜ், சத்யராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர் ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் உட்பட பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் பூஜா குமாரும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  இந்த படத்தின் கதையை ஹேமந்த் ராவ் எழுத, ஜான் மகேந்திரன் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.