மெகா கூட்டணி!

05 நவம்பர் 2019, 04:45 PM

இயக்குநர் ஏ.ஆர். முருகதாசுடன் இணைந்து, ‘தர்பார்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ரஜினி. அதையடுத்து, ‘சிறுத்தை’ சிவாவுடன் இணைந்து, 168வது படத்தில் நடிக்க களம் இறங்கியிருக்கிறார். அதற்கு அடுத்து ‘பாகுபலி’ பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம், இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒரே நேரத்தில் தயாராவது போல திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது. மிக பிரம்மாண்ட படமாக அதை எடுக்க ராஜமவுலி திட்டமிடுகிறாராம்.