மிரட்­டுமா ‘மிருகா?’

19 செப்டம்பர் 2019, 07:25 PM

சென்­னை­யி­லுள்ள அடை­யார் திரைப்­பட கல்­லுா­ரி­யில் பயின்­ற­வ­ரும், இயக்­கு­னர் பாலா­வு­டன் ‘நான் கட­வுள்’ படத்­தில் உதவி இயக்­கு­ன­ராக பணி­யாற்­றி­ய­வ­ரு­மான ஜே.பார்த்­தி­பன் இயக்­கும் படம் ‘மிருகா’. இந்த படத்­தில் ஸ்ரீகாந்­தும், ராய்லட்­சு­மி­யும் கதா­நா­ய­கன், கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார்­கள். இந்த படத்தை ‘ஜாக்­கு­வார் ஸ்டூடி­யோஸ்’ என்ற நிறு­வ­னம் சார்­பில் பி. வினோத் ஜெயின் தயா­ரிக்­கி­றார். சென்­னையை மைய­மாக கொண்டு பல்­வேறு தொலை­க்காட்­சி­க­ளுக்கு தமிழ், தெலுங்கு மொழி­க­ளில் நிகழ்ச்­சி­களை தயா­ரித்து வழங்­கிய வினோத் ஜெயின் முதன் முத­லாக திரைப்­பட தயா­ரிப்­பில் இறங்கி தயா­ரிக்­கும் படம் ‘மிருகா!’

ஒரு கொலை­கா­ரன் தனது அழகு, பண்பு ஆகி­ய­வற்றை வைத்து பெண்­களை ஏமாற்றி வாழ்ந்து வரு­கி­றான். அப்­படி ஒரு முயற்­சி­யின்­போது ஒரு பெண்ணை காத­லித்து திரு­ம­ண­மும் செய்து கொள்­கி­றான். அந்த பெண்­ணை­யும் ஏமாற்ற முயற்­சிக்­கும்­போது விதி வேறு­வி­த­மாக அமைந்து விடு­கி­றது. அதன் பிறகு என்ன நடக்­கி­றது என்­பதை சொல்­லும் பட­மாம் ‘மிருகா’.

இந்த படத்­தில் ஸ்ரீகாந்த், ராய்லட்­சு­மி­யு­டன் தேவ்­கில், நைரா, வைஷ்­ணவி சந்­திர மேனன், பிளாக் பாண்டி உட்­பட பலர் நடிக்­கின்­ற­னர். இந்த படத்­தின் கதை, திரைக்­கதை எழுதி ஒளிப்­ப­திவு செய்­ப­வர் எம்.வி. பன்­னீர்செல்­வம். படத்­தொ­குப்பை சுதர்­சன் கவ­னிக்க, மிலன், எஸ். ராஜா மோகன் ஆகி­யோர் கலை இயக்­கத்தை கவ­னிக்­கின்­ற­னர். அருள் தேவ் இசை­ய­மைக்­கி­றார். ‘தள­பதி’ தினேஷ், ஸ்ரீதர் ஆகி­யோர் சண்டைக்காட்­சி­களை அமைக்­கி­றார்­கள். சென்னை, பொள்­ளாச்சி, மூணாறு, ஊட்டி, கொடைக்­கா­னல் ஆகிய இடங்­க­ளில் பட­மா­கி­யுள்ள ‘மிருகா’ விரை­வில் ரிலீ­சாக இருக்­கி­றது.