கல்­லுாரி மாண­வ­னின் கதை!

19 செப்டம்பர் 2019, 07:24 PM

கே புரொ­டக்­க்ஷன்ஸ். பட­நி­று­வ­னம் சார்­பில் எஸ்.என். ராஜ­ரா­ஜன், ஜி.வி. பிர­காஷ்குமார்  நடிக்­கும் புதிய படத்தை தயா­ரிக்­கி­றார்.

இந்த புதிய படத்­தின் மூலம் இயக்­கு­னர் வெற்­றி­மா­ற­னி­டம் உதவி இயக்­கு­ன­ராக பணி­பு­ரிந்த மதி­மா­றன் புக­ழேந்தி இயக்­கு­ன­ராக அறி­மு­க­மா­கி­றார். ஜி.வி. பிர­கா­ஷுக்கு ஜோடி­யாக வர்ஷா பொல்­லம்மா நடிக்க இருக்­கி­றார். இவர் ‘சீம­துரை,’ ‘96,’ ‘பிகில்’ உட்­பட படங்­க­ளில் நடித்­த­வர். மேலும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் ‘வாகை’ சந்­தி­ர­சே­கர் மற்­றும் அறி­முக நடி­கர் குணா நடிக்­கி­றார்­கள்.

ஜி.வி. பிர­காஷ் இசை­ய­மைக்­கும் இந்த படத்­திற்கு விஷ்ணு ரங்­க­சாமி ஒளிப்­ப­திவு செய்ய இருக்­கி­றார். இவர் ‘அண்­ண­னுக்கு ஜே,’ ‘வெள்ளை யானை’ படங்­க­ளில் ஒளிப்­ப­தி­வா­ள­ராக பணி­பு­ரிந்­த­வர். படத்­தொ­குப்பை எஸ். இளை­ய­ராஜா கவ­னிக்­கி­றார்.

இப்­ப­டத்­தில் ஜி.வி. பிர­காஷ் கல்­லுாரி மாண­வ­ராக நடிக்­கி­றார். ஒரு மாண­வ­னுக்கு கல்­லுா­ரிக்கு வெளியே நடக்­கும் இன்­னல்­களை ஆக்­க்ஷன் கலந்து திரைக்­க­தை­யாக உரு­வாக்கி இருக்­கி­றார்­கள். காதல், எமோ­ஷ­னல், ஆக்­க்ஷன் முழுக்க முழுக்க கமர்­ஷி­யல் பட­மாக தயா­ராக இருக்­கி­றது. இந்த படத்­தின் பூஜை மற்­றும் படப்­பி­டிப்பு ஏவி.எம் அரங்­கில் நடை­பெற்­றது. இதில் தயா­ரிப்­பா­ளர் கலைப்­புலி எஸ். தாணு, இயக்­கு­னர்­கள் வெற்­றி­மா­றன், சமுத்­தி­ர­கனி, சுப்­ர­ம­ணிய சிவா, சர­வ­ணன், இளன் உள்­ளிட்­ட­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.