இரண்டு நாயகிகளின் கதை!

10 செப்டம்பர் 2019, 06:05 PM

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை ‘பூ’ சசி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளனர். சித்தார்த் ஜோடியாக லிஜோமோல் ஜோசும், ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக காஷ்மிரா பர்தேசியும் நடித்துள்ளனர். இருவருமே தமிழ் சினிமாவுக்கு புதியவர்கள். அவர்களை பற்றிய சிறிய அறிமுகம்.

காஷ்மிரா பர்தேசி! மும்பை கல்லுாரியில் பேஷன் டிசைனிங் படித்து முடித்து விட்டு மாடல் அழகியாக இருந்தார். சமீபத்தில் வெளிவந்த இந்தி படமான ‘மிஷன் மங்கள்’ படத்தில் நடித்தார். இப்போது தமிழில் நடித்துள்ளார்.

லிஜோமோல் ஜோஸ் கேரளத்து தேவதை. இடுக்கி பொண்ணு. தொலைக்காட்சி நிருபராக மைக் பிடித்துக் கொண்டு இருந்தவர் தயாரிப்பாளர் திலீப் போத்தன் கண்ணில் பட ஹீரோயின் ஆகிவிட்டார்.  தற்போது தமிழில் நடித்துள்ளார்.