‘நெஞ்சம் நிமிர்த்து!’

16 ஆகஸ்ட் 2019, 01:28 PM

ஜெ.ஆர். பிக்­சர்ஸ் பட­நி­று­வ­னம் சார்­பில் ஜெய­லட்­சுமி தயா­ரித்து வரும் புதிய படத்­துக்கு ‘நெஞ்­சம் நிமிர்த்து’ என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இப்­ப­டத்­தின் மூலம் மோகன் என்ற புது­மு­கம் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மா­கி­றார். முன்­னணி கதா­நா­யகி நடிக்­கும் இப்­ப­டத்­தின் மற்ற நடி­கர், நடி­கை­கள் விப­ரம் விரை­வில் அறி­விக்­கப்­பட உள்­ள­தாம். இப்­ப­டத்­தின் கதை, திரைக்­கதை வச­னம் எழுதி இயக்கி வரும் சாம் இம்­மா­னு­வேல் கூறி­ய­தா­வது:–

‘‘சமூ­கத்­துக்­காக போரா­டும் இப்­ப­டத்­தின் நாய­கன், இந்­திய அள­வி­லான ஒரு சமூக பிரச்­னையை கையில்  எடுக்­கி­றான். இன்­றைய கால­கட்ட அத்­தி­யா­வ­சிய பிரச்­னை­யான இவ்­வி­வ­கா­ரம் விஸ்­வ­ரூ­ப­மாக உரு­வெ­டுத்து, அவன் கண்­முன்னே நிற்­கி­றது. இதை­ய­டுத்து கதா­நா­ய­கன் அப்­பி­ரச்­னையை எப்­படி கையாள்­கி­றான் என்­பதை விறு­வி­றுப்­பும் கலந்த பக்கா கமர்­ஷி­யல் கதை­யாக உரு­வாகிறது. இம்­மாத இறு­தி­யில் தொடங்­கப்­ப­ட­வுள்ள இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு நெல்லை, மதுரை, கன்­னி­யா­கு­மரி உள்­ளிட்ட இடங்­க­ளி­லும், பாடல் மற்­றும் சில முக்­கிய காட்­சி­கள் வெளி­நா­டு­க­ளி­லும் மொத்­தம் 50 நாட்­க­ளில் நடத்தி முடிக்­கப்­ப­ட ­வுள்­ளது.’’