சம்பளம் வாங்காமல் நடித்த படம்!

14 ஆகஸ்ட் 2019, 01:36 PM

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் அன்பழகன் இயக்கிய ‘சாட்டை’ திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி மகன் பிரபு திலக் தயாரித்துள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோருடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா உட்பட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘அடுத்த சாட்டை’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, ‘‘‘சாட்டை’ படத்தில் நன்றாக நடித்தோம். படம் ஹிட். ஆனால் படத்தில் நடித்த நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை’’ என்றார்.