சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 405 – எஸ்.கணேஷ்

14 ஆகஸ்ட் 2019, 01:28 PM

நடி­கர்­கள் : ஸ்ரீ, மிதுன் முரளி, ஊர்­மிளா மஹந்தா, மனீஷா யாதவ், முத்­து­ரா­மன் மற்­றும் பலர்.

இசை : பிர­சன்னா, ஒளிப்­ப­திவு : விஜய் மில்­டன், எடிட்­டிங் : கோபி கிருஷ்ணா, தயா­ரிப்பு : திருப்­பதி பிர­தர்ஸ் (சுபாஷ் சந்­தி­ர­போஸ், ரோனி ஸ்க்ருவாலா), திரைக்­கதை,  இயக்­கம் : பாலாஜி சக்­தி­வேல்.

வேலு (ஸ்ரீ) ரோட்­டோர டிபன் கடை ஒன்­றில் வேலை செய்­யும் பதின்­வ­யது இளை­ஞன். கடை வேலை­களை செய்­வ­தோடு நண்பனோடு மகிழ்ச்­சி­யாக வாழ்­கி­றான். ஜோதி­யும் (ஊர்­மிளா மஹந்தா) அவ­ரது அம்­மா­வும் அங்­கி­ருக்­கும் அபார்ட்­மெண்ட்­க­ளில் வீட்டு வேலை செய்து பிழைக்­கி­றார்­கள். ஜோதி மீது காதல் வயப்­ப­டும் வேலு அவளை பின்­தொ­டர்­கி­றான். இது தெரிந்து ஜோதி­யும் அவ­ரது அம்­மா­வும் அவனை திட்டி விரட்­டு­கி­றார்­கள்.

ஆர்த்­தி­யும் (மனீஷா யாதவ்), தினே­ஷும் (மிதுன் முரளி) அங்­குள்ள அபார்ட்­மெண்ட்­க­ளில் வாழும் மாண­வர்­கள். பணக்­கா­ர­னான தினேஷ் கண்­டிப்பு இல்­லா­மல் தீய பழக்­கங்­க­ளோடு வளர்­கி­றான். அவ­னின் சுய­ரூ­பம் தெரி­யா­மல் நட்­போடு பழ­கும் ஆர்த்தி அவனை விரும்­பத் தொடங்­கு­கி­றாள். இதனை பயன்­ப­டுத்தி ஆர்த்­தி­யின் அந்­த­ரங்­கத்தை வீடியோ எடுப்­ப­தோடு அதை தனது நண்பர்­க­ளோடு பகிர்ந்து கொள்ளவும் செய்கி றான் தினேஷ். உண்மை தெரிந்­து அவனை விட்டு வில­கும் ஆர்த்தி போலீ­சிடம் போவ­தாக மிரட்­டு­கி­றாள். இத­னால் ஆர்த்­தி­யின் மீது தினே­ஷிற்கு கொலை­வெறி  ஏற்­ப­டு­கி­றது. குறிப்­பிட்ட நாளில் ஆர்த்­தி­யின் வீட்­டிற்­குச் சென்று தினேஷ் ஆஸிட் ஊற்­று­கி­றான். ஆனால் ஆர்த்­திக்கு பதி­லாக அங்கு வேலை செய்­யும் ஜோதி ஆசிட் தாக்­கு­த­லுக்கு ஆளா­கி­றாள். கடு­மை­யான பாதிப்­புக்கு உள்­ளா­கும் ஜோதி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­கி­றாள்.

இந்த வழக்கை விசா­ரிக்­கும் இன்ஸ்­பெக்­டர் கும­ர­வேல் (முத்­து­ரா­மன்) சந்­தே­கத்­தின்­படி தினேஷை விசா­ரிக்­கி­றார். தினே­ஷின் தாயான பள்ளி தாளா­ளர் கும­ர­வே­லின் பேரத்­திற்கு சம்­ம­திக்­கா­மல் போக, ஆர்த்­தி­யின் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் தினேஷை குற்­ற­வாளி ஆக்­கு­கி­றார். தினே­ஷின் தாயு­டன் தொடர்­புள்ள அமைச்­சர் இவ்­வ­ழக்­கில் குறுக்­கி­டு­கி­றார். அவ­ரது ஆலோ­ச­னைப்­படி பத்து லட்­சம் பணம் பெற்­றுக்­கொண்டு இந்த வழக்­கில் வேலுவை சேர்க்­கி­றார் கும­ர­வேல். ஜோதிக்கு உயர்­தர சிகிச்சை அளிப்­ப­தாக வாக்­க­ளித்து வேலுவை பழியை ஏற்­றுக்­கொள்ள வைக்­கி­றார். ஜோதி­யின் நலத்­திற்­காக வேலு­வும் கொலை­மு­யற்சி வழக்­கிற்­காக பத்­து­வ­ருட ஜெயில் தண்­ட­னையை ஏற்­றுக்­கொள்­கி­றான். கும­ர­வேல் ஜோதிக்கு சிறு உத­வி­யும் செய்­யா­மல் மொத்த பணத்­தை­யும் வீடு கட்­டு­வ­தற்­காக பயன்­ப­டுத்­திக்­கொள்­கி­றார்.

வேலு­வின் நண்பன் மூல­மாக அனைத்து உண்­மை­க­ளை­யும் தெரிந்து கொள்­ளும் ஜோதி பொங்­கி­யெ­ழு­கி­றாள். தங்­கள் இரு­வ­ரின் வாழ்க்­கை­யி­லும் விளை­யா­டிய இன்ஸ்­பெக்­டர் கும­ர­வே­லின் முகத்­தில் நீதி­மன்­றத்­தி­லேயே ஆசிட் ஊற்­று­கி­றாள் ஜோதி. கும­ர­வேல் வழக்­கில் ஜோதிக்கு ஏழு­ வ­ருட ஜெயில் தண்­டனை கிடைப்­ப­தோடு, ஜோதி­யின் வழக்கு எண் 18/9 திரும்­ப­வும் விசா­ரிக்­கப்­ப­டு­கி­றது. நீதி­மன்­றத்­தில் உண்மை நிரூ­பிக்­கப்­பட்டு தினேஷ் கைதா­வ­தோடு வேலு விடு­த­லை­யா­கி­றான். இறு­திக்­காட்­சி­யில் சிறை­யில் சந்­திக்­கும் ஜோதி­யி­டம் அவ­ளது கோர­மான முகத்தை கண்­ட­பி­ற­கும் தனது காதலை வெளிப்­ப­டுத்­தும் வேலு அவ­ளுக்காக காத்­தி­ருப்­ப­தாக உறுதி அளிக்­கி­றான்.