காதல் காட்­சி­கள் நீக்­கம்!

14 ஆகஸ்ட் 2019, 01:24 PM

சுசீந்­தி­ரன் இயக்­கத்­தில் பார­தி­ராஜா, சசி­கு­மார், மீனாட்சி கோவிந்­த­ரா­ஜன் நடித்­துள்ள படம், ‘கென்­னடி கிளப்.’ பெண்­கள் கப­டியை மையப்­ப­டுத்தி உரு­வான இப்­ப­டம் குறித்து சசி­கு­மார் சொன்­ன­தா­வது:–     ‘‘ஒரு­வி­தத்­தில் இது­வும் பயோ­பிக் படம்­தான். தங்­கள் வாழ்க்கை கதை­யில், நிஜ கபடி வீராங்­க­னை­களே தோன்றி  நடித்­துள்­ள­னர். பயிற்­சி­யா­ளர் செல்­வ­மாக நானும், கபடி குழு வழி­காட்டி நல்­லு­சா­மி­யாக பார­தி­ரா­ஜா­வும் நடித்­துள்­ளோம்.

எனக்­கும், மீனாட்­சிக்­கு­மான காதல் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன. ஆனால், படத்­தில் கபடி விளை­யாட்­டுக்கு மட்­டுமே அதிக முக்­கி­யத்­து­வம் தரப்­பட்­டி­ருப்­ப­தால், அதன் வேகம் குறை­யக்­கூ­டாது என்று, காதல் காட்­சி­களை நீக்­கி­விட்­டோம். ‘கென்­னடி கிளப்’ பெரிய வெற்றி பெறும். 2ம் பாகம் தயா­ரா­கும்­போது அந்த காட்­சி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டும். கோச்­ச­ராக நடித்­துள்ள என்­னைப் பற்­றிய பின்­ன­ணி­யு­டன் 2ம் பாகத்­தின் கதை அமைந்­தி­ருக்­கும்.’’