14 ஆகஸ்ட் 2019, 01:23 PM
‘ஆரண்ய காண்டம்,’ ‘ஜோக்கர்’ போன்ற படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் குரு சோமசுந்தரம். இப்போது வெப் சீரிஸ்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தி தடம் பதிக்கவுள்ளார். தற்போது 'டாப்லெஸ்' எனும் ஒரு வெப் சீரிசில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிசின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது.
ஜீ5 மற்றும் இயக்குனர் கே எஸ் சிணீஷின் சேல்ஜர் பாக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த தொடரை, இயக்குனர் தினேஷ் மோகனால் இயக்க உள்ளார்.
‘பாண்டிய நாடு’ படத்தில் வில்லனாக நடித்து கலக்கிய ஹரிஷ் உத்தமன், ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘மாநகரம்’ போன்ற வெற்றி படங்களில் வில்லனாக நடித்த அருண் அலெக்சாண்டர், ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த், மற்றும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ தயாரிப்பாளர் பசாக் இந்த இணையத் தொடருக்கு தங்கள் நடிப்பின் மூலம் பலம் சேர்க்க உள்ளனராம்.