14 ஆகஸ்ட் 2019, 01:22 PM
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஆர்.பி. சவுத்ரியின் ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’. இந்நிறுவனத்தின் 90-வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி என். ராஜசேகர் இயக்கி வருகிறார். ‘களத்தில் சந்திப்போம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படம், இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். அதை அதிரடி ஆக்க்ஷன், காமெடி, காதல் என அனைத்து ஜனரஞ்சக விஷயங்களையும் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.
சென்னை, தென்காசி, காரைக்குடி ஆகிய இடங்களில் படமாகியுள்ள இப்படத்தில் ராதாரவி, பாலசரவணன், இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, வேலா ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ‘பூலோகம்’ ராஜேஷ் ஆகியோருடன் ‘பிசாசு’ படத்தில் நடித்த பிரயாகா மார்ட்டின் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.