தாத்தா போல நானும்!

06 ஆகஸ்ட் 2019, 06:11 PM

‘காதல் மன்­னன்’ ஜெமினி கணே­சன், ‘நடி­கை­யர் தில­கம்’ சாவித்­திரி தம்­ப­தி­யின் பேரன் அபி­நய் ‘ராமா­னு­ஜர்’ படம் மூலம் அறி­மு­க­மாகி பின்­னர் ‘சென்னை 28’ 2ல் படத்­தில் நடித்து தற்­போது திரிஷா, சிம்­ர­னு­டன் இணைந்து ‘பர­ம­ப­தம் விளை­யாட்டு’ படத்­தில் நடித்து வரும் இவ­ரி­டம்  பேசி­ய­போது....

‘‘நான் சினிமா துறைக்கு லேட்­டாக வர கார­ணம், எனக்கு ஆரம்ப காலங்­க­ளில் ஸ்போர்ட்ஸ் மீது அதீத ஆர்­வம் இருந்­தது. மேலும், நான் ஒரு தொழில்­முறை டேபிள் டென்­னிஸ் வீரர். எனக்கு விளை­யாட்டு, பயிற்சி என ஏனைய விஷ­யங்­க­ளுக்கே நேரம் சரி­யாக இருந்­த­தால் அதி­லேயே மூழ்­கி­விட்­டேன். ‘பாய்ஸ்’ படம் வந்த சம­யத்­தில் பல­ரும் என்னை நடிக்க வலி­யு­றுத்­தி­னர். இருந்­தும் அப்­போது எனக்கு ஆர்­வம் வர­வில்லை. மேலும் என்னை போலவே என் தாத்தா ஜெமி­னிக்­கும் முதல் காதல், ஸ்போர்ட்ஸ்­தான்.

நாங்­கள் இரு­வ­ரும் சினி­மாவை பற்றி பேசி­யது கிடை­யாது, அவ­ரு­டைய நடிப்பு விஷ­யங்­கள் பற்­றி­யும் பேசி­யது கிடை­யாது. அதி­க­பட்­ச­மாக ஸ்போர்ட்ஸ் விஷ­யங்­கள்­தான் பேசு­வோம். மற்ற சரா­சரி நடி­கர்­கள் போல நானும் முறை­யாக ஆடி­ஷன் எல்­லாம் அட்­டன்ட் செய்­து­தான் சினிமா வாய்ப்­பு­களை பெறு­கி­றேன்.

எனக்கு வீட்­டி­லும் பிரத்­யேக நடிப்பு பயிற்சி என்ற ஒன்­றெல்­லாம் என் தாத்தா மூலம் கிடைத்­தது கிடை­யாது. அவ­ரும் அதை விரும்­பி­ய­தில்லை. நானும் அவ­ரி­டம் அதை­யெல்­லாம் எதிர்­பார்த்­த­தில்லை'' என்­றார்.