காஜல் பற்றி வதந்தி!

09 ஜூலை 2019, 03:44 PM

சினிமா துறையில் குறிப்பாக நடிகைகள் பற்றி பல வதந்திகள் அடிக்கடி பரவும். அதை யார் பரப்புகிறார்கள் என தெரியாது, ஆனால், பல சர்ச்சையான வதந்திகள் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் பல வருடங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் பிரபல தெலுங்கு நடிகர் ராமுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என தகவல் பரவியது.

ஆனால், உண்மையில் காஜல் அப்படியில்லை. ராம் தங்கியிருந்த அதே அபார்ட்மெண்ட்டில்தான் காஜல் அகர்வாலும் தங்கியிருந்துள்ளார். ஆனால், அவரை சந்தித்தது கூட இல்லையாம். இப்படி வதந்தி பரவிய பிறகுதான் அவருக்கு அது பற்றி தெரியும் என பதில் அளித்துள்ளார்.