‘கொழுக் மொழுக்’ மிஸ்ஸிங்!

09 ஜூலை 2019, 03:40 PM

விஜய் தேவகொண்டாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி.’ இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இப்படத்தின் மாபெரும் வெற்றியால் அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொரில்லா’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவரது லேட்டஸ்ட் ஜிம் ஒர்க்–அவுட் புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ‘கொழு கொழு’வென்று ஷாலினி இந்த போட்டோவில் முற்றிலுமாக மாறி போயுள்ளார்.