வெற்றிமாறன் தயாரிப்பில் ரோஷன்!

09 ஜூலை 2019, 03:09 PM

சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜீனியஸ்’ படத்தில் நடித்தவர் ரோஷன். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், சுசீந்திரன் ரோஷனை தனது அடுத்த படத்திலும் நடிக்க வைக்கிறார். இந்நிலையில் ரோஷன்  வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை ரோஷனும் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.

படத்தை வெற்றிமாறன் உதவியாளர் கார்த்திக் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்குகிறது. தற்போது மற்ற நடிகர் – நடிகைள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன.