நான்கு கதாநாயகிகளுடன் பட்டயா தீவில்!

09 ஜூலை 2019, 03:07 PM

‘‘இந்தியாவில் இருந்து பாங்காக்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன், மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான். அங்கே சென்றதும், அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசக்கார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்ச்சியான விவரம் தெரிய வருகிறது.

அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பதுதான் ‘சென்னை டூ பாங்காக்’ படத்தின் கதை’’ என்கிறார் நடிகர் ஜெய் ஆகாஷ். நான்கு கதாநாயகிகளுடன் பட்டயா தீவில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் ஜெய் ஆகாஷ்.