சர்வதேச திரைப்பட விழாவில் ஷகிலா படம்!

09 ஜூலை 2019, 03:06 PM

தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது. ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் ஷகிலாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்த அப்படக்குழு முடிவு செய்துள்ளது.