கண்ணீர் விட்டு அழுத ஔிப்பதிவாளர்!

09 ஜூலை 2019, 03:05 PM

தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் பாலசுப்பிரமணியம். குறிப்பாக உதயநிதியின் படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். அண்மையில் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் விழா நடந்தது. இதில் டாக்டர். தீரஜ், மாடல் அழகிகளான துஷாரா, பிரதாயினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாலசுப்பிரமணியனும் பணியாற்றியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய ஒளிப்பதிவாளர், ‘‘உதயநிதி மூலம் எனக்கு தீரஜ் அறிமுகமானார். என் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோது உயிரை காப்பாற்றிக்கொடுத்தது டாக்டர். தீரஜ்தான். உதயநிதி, தீரஜ் இருவரும் இரவு முழுவதும் கண் முழித்து பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன்தான் இப்படம்’’ என கூறி மேடையில் தேம்பி அழுதவரை, தீரஜ் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறியுள்ளார்.