முத்­தம் ஸ்பெஷல்!

11 ஜூன் 2019, 06:28 PM

தெலுங்கு சினி­மா­வில் இளம் ஹீரோக்­க­ளில் தற்­போது டாப்­பில் இருப்­ப­வர் நடி­கர் விஜய் தேவ­ர­கொண்டா. ரசி­கர்­கள், ரசி­கை­கள் என இவ­ருக்கு அதி­கம்.

‘அர்­ஜுன் ரெட்டி’ படத்­தின் மூலம் இவர் கவ­னிக்­கப்­ப­டும் ஹீரோ­வா­கி­விட்­டார். அடுத்­த­டுத்து வந்த இவ­ரின் படங்­கள் ஹிட்­டாக, அதிக சம்­ப­ளம் வாங்­கும் ஜூனி­யர் நடி­கர் என்ற சிறப்பை பெற்­று­விட்­டார். ‘அர்­ஜுன் ரெட்டி’ முதல் ‘கீதா கோவிந்­தம்,’ அடுத்­த­தாக வர­வுள்ள ‘டியர் கம்­ராட்’ படம் வரை எல்­லா­வற்­றி­லும் தொடர்ந்து ஹீரோ­யி­னு­டன் நெருக்­க­மான முத்­தக்­காட்­சி­க­ளில் நடித்­துள்­ளார். இத­னால் சம்­பந்­தப்­பட்ட ஹீரோ­யின்­க­ளி­டம் தொடர்ந்து இது குறித்து கேள்வி கேட்­கப்­பட்டு வரு­கி­றது. அவர்­கள் எல்­லாம் படத்­தின் கதைக்­காக என கார­ணம் சொல்லி வரு­வது சக­ஜ­மா­கி­விட்­டது. இந்­நி­லை­யில் ரசி­கர்­கள் விஜய் தேவ­ர­கொண்­டாவை ‘தெலுங்கு சினி­மா­வின் இம்­ரான் ஹாஸ்மி’ என இந்தி நடி­க­ரின் பேரை வைத்து கிண்­டல் செய்ய தொடங்­கி­விட்­டார்­க­ளாம்.