உண்மை சம்­ப­வங்­களை சொல்­லும் ‘மோசடி!’

11 ஜூன் 2019, 06:27 PM

ஜே.எஸ்.சி மூவீஸ் என்ற பட­நி­று­வ­னம் தயா­ரித்­தி­ருக்­கும் படம் ‘மோசடி.’

இந்த படத்­தில் விஜூ நாய­க­னாக நடித்­தி­ருக்­கி­றார். நாய­கி­யாக பல்­லவி டோரா நடித்­துள்­ளார். மற்­றும் அஜெய்­கு­மார், .விஜ­யன், வெங்­க­டாச்­ச­லம், நீலு சுகு­மா­ரன், சர­வ­ணன், மோகன் ஆகி­யோர் நடித்­துள்­ள­னர். கதை, திரைக்­கதை,வச­னம் எழுதி இயக்­கு­கி­றார் – கே.ஜெக­தீ­சன்.

இது முழுக்க முழுக்க உண்மை சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு உரு­வாக்­கப்­பட்ட படம்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்­பர் 8ம் தேதி இரவு 8 மணி­ய­ள­வில் 500, 1000 ரூபாய் நோட்­டு­கள் செல்­லாது என்ற அறி­விப்பு வெளி­யா­னது. அதை தொடர்ந்து பெரும் புள்­ளி­கள் அவர்­க­ளின் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி 500 மற்­றும் 1000 ரூபாய் நோட்­டுக்­களை எப்­படி இரண்­டா­யி­ரம் ரூபாய் நோட்­டு­க­ளாக மாற்­றி­னார்­கள், அத­னால் மக்­கள் எப்­ப­டி­யெல்­லாம் பாதிக்­கப்­பட்­டார்­கள், இந்த அறி­விப்பை பயன்­ப­டுத்தி எப்­படி குறுக்கு வழி­யில் மோசடி செய்­தார்­கள், இந்த அறி­விப்பு சரியா தவறா என்­பதை கிரைம் மற்­றும் த்ரில்­ல­ரு­டன் கமர்­ஷி­யல் கலந்து உரு­வாக்கி உள்­ளேன்’’ என்­கி­றார் இப்­ப­டத்­தின் இயக்­கு­னர் கே.ஜெக­தீ­சன்.