‘மென் இன் பிளாக்’ எதிர்­பார்ப்பு!

11 ஜூன் 2019, 06:27 PM

ஹாலி­வுட் நடி­கர் வில் ஸ்மித் நடிப்­பில் வெளி­யாகி பெரும் வர­வேற்பை பெற்ற திரைப்­ப­டம் ‘மென் இன் பிளாக்.’ காமிக்ஸ் கதையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு காமெடி ஜான­ரில்  உரு­வாக்­கப்­பட்ட இந்­தத் திரைப்­ப­டத்தை பாரி சோனன்­பெல்ட் என்­ப­வர் இயக்­கி­னார். மூன்று பாகங்­க­ளைக் கொண்ட இந்த படத்­தின் முதல் பாகம் கடந்த 1997-ம் ஆண்டு வெளி­யா­னது. தொடர்ந்து ‘மென் இன் பிளாக் 2’ கடந்த 2002-ம் ஆண்டு வெளி­யா­னது. இரண்­டா­வது பாகம் வெளி­யாகி பத்து வரு­டங்­கள் கழித்து படத்­தின் மூன்­றாம் பாகம் 2012-ம் ஆண்டு வெளி­யா­னது. படத்­தில் வில் ஸ்மித் மற்­றும் டாம்மி லீ ஜோன்­சின் கதா­பாத்­தி­ரங்­கள் மற்­றும் அவர்­க­ளின் நடிப்பு ரசி­கர்­களை வெகு­வாக கவர்ந்­தது. 2012-ம் ஆண்டு வெளி­யான படங்­க­ளில் அதிக வசூ­லைக் குவித்த 10-வது படம் என்ற சாத­னை­யைப் படைத்­தது ‘மென் இன் பிளாக் 3.’ அமெ­ரிக்க டால­ரில் 624 மில்­லி­யன் வசூ­லைக் குவித்­தது.

இந்த நிலை­யில்,  ‘மென் இன் பிளாக்’ இன்­டர்­நே­ஷ­னல் என பெய­ரி­டப்­பட்­டுள்ள இதன் 4வது பாகம் ரிலீ­சுக்கு ரெடி­யா­கி­விட்­டது. இதில் வில் ஸ்மித் இல்­லா­தது அவ­ரது ரசி­கர்­க­ளுக்கு பெரும் ஏமாற்­ற­மாக அமைந்­துள்­ளது. மாறாக ‘தோர்’ படங்­க­ளில் நடித்து வரும் க்ரிஸ் ஹெம்­வர்த் நடித்­துள்­ளார்.  ‘பாஸ்ட் அன் பியூ­ரி­யஸ் 8’-ஐ இயக்­கிய கேரி கிரே இந்த படத்தை  இயக்­கி­யுள்­ளார். இந்த படம் வரு­கிற 14ம் தேதி திரைக்கு வர­வி­ருக்­கி­றது.