‘மது­ர­ராஜா’ மலை­யா­ளத்­தில் ஹிட்டு!

11 ஜூன் 2019, 06:17 PM

மலை­யாள சினி­மா­வில் அண்­மை­யில் ‘மது­ர­ராஜா’ படம் வெளி­யா­னது. சூப்­பர் ஸ்டார் மம்­முட்டி நடிப்­பில் வந்த இப்­ப­டத்தை ‘புலி­மு­ரு­கன்’ இயக்­கு­னர் வைசாக் இயக்­கி­யி­ருந்­தார். இதில் நடி­கர் ஜெய் முக்­கிய ரோலில் நடித்து மலை­யா­ளத்­தில் அறி­மு­க­மாகி யிருக்­கி­றார். சன்னி லியோன் ஒரு அயிட்­டம் பாட­லில் நட­ன­மா­டி­யுள்­ளார். இப்­ப­டம் வெளி­யாகி 50 நாட்­கள் ஆகி­விட்ட நிலை­யில் வசூ­லில் ரூ.104 கோடியை எட்டி சாதனை படைத்­துள்­ளது. மம்­முட்­டி­யின் படம் ரூ.100 கோடி வசூலை தாண்­டு­வது இதுவே முதல் முறை­யாம். கேர­ளா­வில் அண்­மை­யில் சூர்­யா­வின் ‘என்.ஜி.கே.’ பட­மும் வந்­தி­ருக்­கும் நிலை­யில் ‘மது­ர­ராஜா’ இன்­னும் 22 தியேட்­டர்­க­ளில் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­ற­தாம்.