என் இசையை கேட்டு வியந்­தார்!

11 ஜூன் 2019, 06:16 PM

சமீ­ப­கா­ல­மாக த்ரில்­லர் வகை படங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்த வகை படங்­க­ளுக்கு இசை மிக­வும் முக்­கி­யம். அந்த வகை­யில் ‘மாயா,’ ‘நர­கா­சூ­ரன்,’ ‘இற­வாக்­கா­லம்,’ ‘கேம் ஓவர்,’ ‘ஒப்­பம்’ என்று வரி­சை­யாக த்ரில்­லர் படங்­க­ளின் பின்­னணி இசைக்கு நல்ல பெயர் கிடைத்­தது. இந்த படங்­க­ளின் இசை­ய­மைப்­பா­ளர் ரான் ஈத்­தன் யோகன் த்ரில்­லர் படங்­க­ளுக்கு இசை­ய­மைப்­ப­தில் உள்ள சவால்­கள் குறித்து தான் அளித்த பேட்­டி­யில் கூறி­ய­தா­வது:-

‘‘நான் இசைக் குடும்­பத்­தில் இருந்து வந்­த­வன். தாத்தா சேவி­யர், அப்பா ராஜன் இரு­வ­ரும் முன்­னணி இசை­ய­மைப்­பா­ளர்­க­ளி­டம் இசைக்­கு­ழு­வில் வய­லின், கிடார் வாசித்­த­வர்­கள். லண்­ட­னில் கல்­லூரி படிப்பு. முதல் பட­மான ‘மாயா’­வுக்கு கிடைத்த வர­வேற்பை தொடர்ந்து த்ரில்­லர் படங்­களே அதி­கம் வரு­கின்­றன. ஒரு குறிப்­பிட்ட படங்­க­ளுக்­குள் சிக்க விரும்­ப­வில்லை. எல்லா வகை படங்­க­ளும் இசை­ய­மைக்க விரும்­பு­கி­றேன்.

‘மாயா’ படப்­பி­டிப்­பில் நயன்­தா­ராவை சந்­தித்­தேன். அவர் என் இசையை கேட்டு வியந்­தார். இப்­போது ‘கேம் ஓவர்’ படத்தை இந்­தி­யில் அனு­ராக் காஷ்­யப் வெளி­யி­டு­கி­றார். அவர் படத்தை பார்த்­து­விட்டு என் இசை உட்­பட படத்­தின் அனைத்து தொழில்­நுட்­பங்­க­ளை­யும் பாராட்­டி­னார். ஹாலி­வுட் படம் அள­வுக்கு இருக்­கி­றது’’ என்­றார்.