‘டகால்டி!’ காட்­டும் சந்­தா­னம்!

11 ஜூன் 2019, 06:15 PM

ஷங்­க­ரி­டம் அசோ­சி­யேட் இயக்­கு­ன­ராக பணி­யாற்­றிய விஜய் ஆனந்த் இயக்­கத்­தில் சந்­தா­னம் நடிக்­கும் படத்­திற்கு ‘டகால்டி’ என்று பெயர் வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

காமெ­டி­ய­னாக வலம் வந்த சந்­தா­னம் தற்­போது ஹீரோ­வாக நடித்து வரு­கி­றார். இவர் நடித்த 'தில்­லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்­லுக்கு துட்டு 2' போன்ற படங்­கள் ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு பெற்­றன.

‘டகால்டி’ படப்­பி­டிப்பு கடந்த சில மாதங்­க­ளாக விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரும் நிலை­யில் இந்த படத்­தின் டைட்­டிலை படக்­கு­ழு­வி­னர் வெளி­யிட்­டுள்­ள­னர். இந்த படத்­திற்கு 'டகால்டி' என்ற டைட்­டில் வைக்­கப்­பட்டு டைட்­டி­லு­டன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்­ட­ரும் வெளி­யா­கி­யுள்­ளது. இந்த படத்­தில் சந்­தா­னம் ஜோடி­யாக பெங்­காலி நடிகை ரித்­திகா சென் நடித்து வரு­கி­றார். மேலும் இந்த படத்­தில் சந்­தா­னம் நண்­ப­ராக யோகி பாபு நடிக்­கி­றார். மேலும் ராதா­ரவி, சந்­தா­ன­பா­ரதி, மனோ­பாலா உள்­ளிட்ட பலர் நடிக்­கி­றார்­கள். பின்­னணி பாட­கர் விஜய் நாரா­ய­ணன் இப்­ப­டத்­தின் மூலம் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­றார்.