அஜீத்தைதான் பிடிக்கும்!

16 மே 2019, 08:07 PM

ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் ‘இமைக்கா நொடிகள்,’ ‘அடங்க மறு,’ ‘அயோக்யா’ ஆகிய படங்களில் நடித்தவர். இவர் நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு ஷா ருக் கானை சிறு வயதிலிருந்து பிடிக்கும், ஆனால்,  சமீப காலமாக அஜீத்தைதான் மிகவும் பிடிக்கிறது.

அதிலும், அவரின் சிரிப்புக்கு நான் அடிமை, அவருடன் நடிக்கும்போது அவரின் சிரிப்பை அருகில் இருந்து பார்க்க வேண்டும்’ என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.