‘அந்த நிமிடம்!’

16 மே 2019, 08:06 PM

பல முன்னணி இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த ஆர். குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’. இந்த படத்தில் நொஷின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ருத்ரா, வில்லனாக லால் வீரசிங், போலீஸ் அதிகாரியாக சன்ன பெராரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘‘ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் இதன் இயக்குநர்.

 இந்த படத்திற்கான  படப்பிடிப்புகள் சென்னை, பொள்ளாச்சி, இலங்கை நூரேலியா, ராமர் சீதா கோயில், ராவணா கோட்டை போன்ற பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளதாம்.