தானா நாயுடு நடிக்­கும் பேய் படம்!

14 மே 2019, 06:20 PM

பூதோ­பாஸ் இன்­டர்நேஷ­னல் பிலிம்ஸ் என்ற பட­ நி­று­வ­னம் சார்­பாக பாஸ்­கர் சீனு­வா­சன் தயா­ரிக்­கும் படத்­திற்கு  ‘கைலா’ என்று வைத்­துள்­ள­னர்.

இந்த படத்­தில் தானா நாயுடு கதா­நா­ய­கி­யாக நடித்­துள்­ளார். மற்­றும் பாஸ்­கர், சீனு­வா­சன், பேபி கைலா, அன்­பா­லயா பிர­பா­க­ரன், கவு­சல்யா, செர்­பியா, ஆதியா, சிசர்­ம­னோ­கர், ரஞ்­சன் ஆகி­யோர் நடிக்­கி­றார்­கள். கதை, திரைக்­கதை, வச­னம், தயா­ரிப்பு இயக்­கம், பாஸ்­கர் சீனு­வா­சன்.

படம் பற்றி  இயக்­கு­ன­ரி­டம் கேட்­டோம்... ‘‘உல­கம் முழு­வ­தும் இன்று வரை பேய் என்­றால் ஒருவித­மான பயம் இருக்­கத்­தான் செய்­கி­றது. தானா நாயுடு இப்­ப­டத்­தில் ஒரு எழுத்­தா­ள­ராக நடிக்­கி­றார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடி­வெ­டுத்து அதற்­கான தேடு­த­லில் இறங்­கு­கி­றார். பல வரு­டங்­க­ளாக பேய் வீடு என்று மக்­க­ளால் சொல்­லப்­பட்டு பூட்­டியே கிடக்­கும் ஒரு வீட்டை தேர்ந்­தெ­டுக்­கி­றார். அந்த வீட்­டின் பிரச்­னையை ஆரா­யத் துவங்­கும் போது ஒரு பெண்­ணாக நிறைய பிரச்­னை­களை  சந்­திக்­கி­றார். அதி­லி­ருந்து மீண்­டாரா என்­பதை திகில் பட­மாக உரு­வாக்கி இருக்­கி­றோம்’’

என்­றார்.