டாக்­ட­ராக வருந்­து­கி­றேன்!

14 மே 2019, 06:18 PM

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் என தென்­னிந்­திய சினி­மா­வில் வேக­மாக வளர்ந்­து­வ­ரும் நடி­கை­யாக இருப்­ப­வர் சாய்­பல்­லவி. இவ­ரது நடிப்­பில் அடுத்­த­தாக சூர்­யா­வு­டன் நடித்த ‘என்­ஜிகே’ படம் ரிலீ­சாக உள்­ளது. சமீ­பத்­தில் சாய் பல்­லவி அளித்த பேட்டி ஒன்­றில், ‘‘நான் பிராக்டீஸ் செய்ய மருத்­து­வ­ம­னைக்கு செல்­வ­தில்லை. ஆனால், கண்­டிப்­பாக படித்­ததை நினை­வில் வைத்­துக் கொள்ள வேண்­டும். எனக்கு இருந்த சில திற­மை­க­ளெல்­லாம் கொஞ்­சம் கொஞ்­ச­மாக என்னை விட்டு போய்க் கொண்­டி­ருப்­பதை நான் உணர்ந்­தி­ருக்­கி­றேன். நாம் நன்­றா­கச் செய்த ஒரு விஷ­யம் இப்­போது நமக்­குச் சுத்­த­மாக வராத போது இத­யம் நொறுங்­கு­வ­தைப் போல இருக்­கி­றது. இப்­போது நான் ஒரு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றா­லும் கண்­டிப்­பாக யாரும் என்னை நம்­பப் போவ­தில்லை. என்­னு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக் கொள்­வார்­களே தவிர, நான் தரும் மருந்­து சீட்­டைப் பெற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். வீட்­டில் இருக்­கும் ஒரே டாக்­டர் நான்­தான்’’ என்று சாய் பல்­லவி கூறி­யுள்­ளார்.