தமிழ் சினி­மா­வில் சாதிக்க வேண்­டும்!

14 மே 2019, 06:12 PM

கன்­ன­டத்­தில் வெளி­யான ‘தேசி’ படம் மூலம் தனது திரை­யு­லக பய­ணத்தை தொடங்­கிய மணி தொடர்ந்து பெங்­காலி, இந்தி உட்­பட பல மொழி­க­ளில் நடித்து வரு­கி­றார். கன்­ன­டத்­தில் நடித்து வெற்­றி­ பெற்ற முதல் தமி­ழன் மணி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மத்­திய அரசு ‘பரம்ஸ்ரீ’ என்ற விருதை 2016ம் ஆண்டு அவ­ருக்கு வழங்கி கவு­ர­வித்­தது.

அடுத்­த­தாக 2014ம் ஆண்டே மகா­ராஷ்­டிரா அர­சின் கவு­ரவ் சம்­மான் என்ற விரு­தை­யும் பெற்­றார். அதே ஆண்டு பெங்­காலி மொழி­யில் நடித்த ‘நிர்­மோக்’ படத்­திற்­காக சிறந்த நடி­க­ருக்­கான விரு­தை­யும், பெங்­காலி அர­சின் ‘பெங்­கால் எக்ச­லன்ஸ்’ விரு­தை­யும் பெற்­றார். ‘‘நான் எத்­தனை மத்­திய, மாநில அரசு விரு­து­களை பெற்­றா­லும், என் தமிழ் மொழி­யில் நடித்து தமி­ழக மக்­க­ளின் நெஞ்­சங்­க­ளில் வாழ்­வதே எனக்கு மிகப்­பெ­ரிய விரு­தாக நான் கரு­து­வேன். அது விரை­வில் நடக்க இருக்­கி­றது. ஏ.ஆர்.கே. ராஜ­ராஜா இயக்­கும் புதிய படத்­தின் மூலம் தமிழ் திரை­யு­ல­கில் கால்­ப­திக்­கி­றேன்.  முழுக்க முழுக்க ஆக்­க்ஷன் பட­மாக அதை உரு­வாக்க இருக்­கி­றார். படப்­பி­டிப்பு அடுத்த மாதம் துவங்க உள்­ளது’’ என்­றார் நடி­கர் மணி.