அவர் படம்தான் காரணம்!

14 மே 2019, 05:59 PM

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் வெளிவந்த கேங்ஸ்டர் படங்களில் முதன்மையானது விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம் வேதா’ படம். குறிப்பாக இப்படத்தின் தீம் மியூசிக்தான் இப்படத்தை துாக்கி நிறுத்தியது என்று கூட சொல்லலாம். ஆனால், இப்படிப்பட்ட இந்த தீம் மியூசிக்கை அஜீத்தை மனதில் நினைத்துத்தான் அமைத்தாராம் படத்தின் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம். இதுகுறித்து சமீபத்தில் சாம் கூறுகையில், ‘‘‘விக்ரம் வேதா’ பிஜிம் இசையமைக்கும் போது அஜீத் சாரை மையமாக வைத்தே செய்தேன். நான் சென்னை வந்தபோது எனக்கு ஒருவரையும் தெரியாது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று பார்த்தால் அஜீத் சார்தான் பெரிய ஸ்டார் ஆகியுள்ளார். அந்த துாண்டுதலிலே சினிமாவுக்குள் வந்தேன். அஜீத் சாரோட எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் பரவாயில்லை, அப்படத்திற்கு இசையமைக்க ஆசை’’ என குறிப்பிட்டார்.