இனியா ரீ–என்ட்ரி!

19 ஏப்ரல் 2019, 03:13 PM

‘ஓம்’ சினி வென்ச்­சர்ஸ் சார்­பாக சாரதி சதீஷ் தயா­ரிக்க, அறி­முக இயக்­கு­னர் சாய் கிருஷ்ணா இயக்­கத்­தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சவுந்­த­ர­ராஜா, ராமச்­சந்­தி­ரன் ஆகி­யோ­ரு­டன் இணைந்து இனியா முக்­கிய வேடத்­தில் நடித்­தி­ருக்­கும் படம் ‘காபி’.

‘‘ஏழ்மை நிலை­யி­லி­ருக்­கும் குடும்­பத்தை சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வய­தி­லேயே தனது பெற்­றோரை இழந்து விடு­கி­றாள். வாழ்­வின் அனைத்து சவால்­க­ளை­யும், சோத­னை­க­ளை­யும் எதிர்­கொண்டு, சமா­ளித்து, லட்­சி­யத்­து­டன் தனது கனவை நன­வாக்க போரா­டு­கி­றாள். ஒரு நல்ல நிலை­மைக்கு வந்த பிறகு சற்­றும் எதிர்­பா­ராத பெரும் பின்­ன­டை­வு­க­ளை­யும், அதிர்ச்­சி­க­ர­மான நிகழ்­வு­க­ளை­யும் அவள் எதிர்­கொள்ள வேண்­டிய சூழல் அமை­கி­றது. அதை அதில் எப்­படி வெற்றி பெற்­றாள் என்­பதே கதை’’ என்­கி­றார் இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் சாய் கிருஷ்ணா.