இந்த உலகம்தான் கதை!

19 ஏப்ரல் 2019, 03:12 PM

‘மத்­திய சென்னை,’ ‘காட்­டுப்­பய சார் இந்த காளி’ படங்­களை தொடர்ந்து ‘அசால்ட்’ படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் நடி­கர் ஜெய்­வந்த்.

‘‘அம்­மா­வின் ஊர் நாகர்­கோ­வில். அங்­கே­தான் பிறந்­தேன். நமக்கு பூர்­வீ­கம் புதுக்­கோட்டை. பள்ளி படிப்பு, கல்­லூரி என சென்­னைக்கு வந்து விட்­டேன். சினி­மா­வுக்கு சம்­பந்­தம் இல்­லாத குடும்­பம். சினி­மா­வின் மேல் வெறும் ஆசையை மட்­டும் கொள்­ளா­மல், அதை பற்றி தீவி­ர­மாக தெரிந்தும் கொண்­டேன். முதல் வாய்ப்­பில் ஆயி­ரம் கஷ்­டங்­கள். ஒரு வழி­யாக ‘மத்­திய சென்னை’ படம் நல்ல அறி­மு­கம் தந்­தது. பெரும் வெற்றி, வசூல் இல்­லை­யென்­றா­லும் நல்ல சினி­மா­வின் பக்­கம் நின்­றது. நடித்­துக் கொண்­டி­ருக்­கும் படம் ‘அசால்ட்.’ நடன இயக்­கு­ந­ராக அறி­யப்­பட்ட பூபதி ராஜா எழுதி இயக்­கு­கி­றார். திரைக்­க­தை­யில் அவ்­வ­ளவு சுவா­ரஸ்­யம். எதிர்­பா­ராத திருப்­பங்­கள் நிறைந்த கதை. வட சென்­னையை மையப்­ப­டுத்­து­கிற கதை. இந்த நேரத்­தில் நான் நடிக்க வேண்­டிய படம்.  இந்த படம் வேறொரு நிலை­யில் ரசி­கர்­களை வந்து சேரும். காலம் கடந்­தும் ரசி­கர்­கள் மத்­தி­யில் நிற்­கக்­கூ­டிய பட­மாக இருக்­கும். இதோ நீங்­க­ளும், நானும், நாம் எல்­லா­ரும் பார்த்து ரசிக்­கிற இந்த உல­கம்­தான் கதை. நல்ல படம். நல்ல இடத்­துக்கு என்­னைக் கொண்டு போகும்’’ என்­கி­றார் ஜெய்­வந்த்.