இரவில் தொடங்கி பகலில் முடியும்!

19 ஏப்ரல் 2019, 03:11 PM

‘பச்சை என்­கிற காத்து,’ ‘மெர்­லின்’ படங்­களை இயக்­கிய கீரா அடுத்து ‘பற’ என்ற படத்தை இயக்­கு­கி­றார். இப்­ப­டத்­தின் இசை வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடைபெற்­றது. படம் பற்றி இயக்­கு­னர் கீரா கூறி­ய­தா­வது: – ‘‘பிளாட்பாரத்­தில் வாழ வழி­யற்ற ஒரு­வ­னும், ஒரு கிரா­மத்­தி­லி­ருந்து கிளம்­பும் காத­லர்­க­ளும், வய­தான காலத்­தில் தனி­மை­யி­லி­ருந்து விடு­பட கிளம்­பும் முதி­யோரும், ஒரு திரு­ட­னும், ஒரு வழக்­க­றி­ஞர், ஒரு கட்சி தலை­வ­ரும், போலீ­சும், கிளப் டான்­சரும் என பல்­வேறு மனி­தர்­க­ளின் வாழ்க்கை ஓர் இர­வில் தொடங்கி ஒரு பக­லில் முடி­யும் 12 மணி நேர கதை­தான் "பற". படத்­தின் படப்­பி­டிப்பு நாகர்­கோ­வில், ராய­பு­ரம், எண்­ணூர் மற்­றும் சென்­னையை சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளில் பட­மாக்­கப்­பட்டு வரு­கி­றது. படத்­தில் சமுத்­தி­ர­கனி, சாந்­தினி, முனிஸ்­காந்த், நிதிஷ் வீரா, முத்­து­ரா­மன், சாஜீ மோன், வெண்பா, தீக்­க­திர் கும­ரே­சன், கம்­பம் மீனா, சூப்­பர் குட் சுப்­ர­மணி, பேரா­சி­ரி­யர் செல்­வகு­மார், அஸ்­மிதா, வின்­னர் ராமச்­சந்­தி­ரன், பிரின்ஸ் மற்­றும் பலர் நடிக்­கின்­ற­னர்.’’