கொந்தளிப்பு!

16 ஏப்ரல் 2019, 05:26 PM

நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு நயன்தாராவை பற்றி பேசிய பேச்சு கடும் கண்டனத்துக்குள்ளானது. நயன்தாராவே தனிப்பட்ட முறையில் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் அவரது பாய்பிரண்டும் காதலனுமான இயக்குனர் விக்னேஷ் சிவனும், ராதாராவியை காய்ச்சியெடுத்தார். மேலும் அவர் கூறும்போது, ‘‘கொலையுதிர் காலம்’ படத்தை நயன்தாரா முழுதாக முடித்து கொடுக்கவில்லை’’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

விக்னேஷின் இந்த வார்த்தையை ‘கொலையுதிர் காலம்’ பட தரப்பினர் கெட்டியாக பிடித்து கொண்டி ருக்கின்றனர். நயன்தாரா தனது படத்தை முடித்துக்கொடுக்கவில்லை என்று விக்னேஷ் சிவனே கூறியிருக்கிறார். இதனால் பட தரப்பிற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கொந்தளித்து கொண்டி ருக்கிறார்களாம்.