பின்வாங்கியது!

16 ஏப்ரல் 2019, 05:25 PM

விஷால் நடிக்கும் படம் ‘அயோக்யா.’ இப்படத்தில் ராஷி கண்னா கதாநாயகியாக நடிக்கிறார்.  பார்த்திபன், கே.எஸ். ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வரும் 19ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். அன்றைய தினம் ராகவா லாரன்சின் ‘முனி-4 காஞ்சனா 3’ படம் வெளிவருகிறது. அதே தேதியில் ‘அயோக்யா’வை வெளியிட்டால் போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் ‘அயோக்யா’  படத்தை மே 10ம் தேதிக்கு மாற்றிவிட்டனர்.