சமந்தா பிட்னஸ்!

16 ஏப்ரல் 2019, 05:24 PM

தெலுங்கு ஹீரோவான ராம்சரண் தேஜா மனைவி நடத்தி வரும் பத்திரிகை ஒன்றில் தன்னுடைய பிட்னஸ் ரகசியங்களைப் பற்றித் தெரிவித்துள்ளார் சமந்தா. அதில் தினசரி அவர் சாப்பிடும் உணவு என்ன என்பதையும் கூறியிருக்கிறார். காலையில் முட்டை, அவகோடா பழம், மதியம் மீன், ஆட்டுக்குட்டி கறி, தானிய உணவு மாலையில் சர்க்கரைவள்ளி கிழங்கு, முட்டை. இரவில்  மீன், ஆட்டுக்குட்டி கறி ஆகியவற்றை சாப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தான் வெஜிடேரியனாக மாறிவிட்டதாக சமந்தா தெரிவித்தார் என செய்திகள் வந்தன. ஆனால், இப்போது அவர் நான் – வெஜ் சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.