‘மெஹந்தி சர்க்க’சில் மூன்று காதல்!

16 ஏப்ரல் 2019, 05:04 PM

இயக்குநர் ராஜு முருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார்.   இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, ‘‘இது காதல் படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்த படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல்தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கும் ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்த படத்தின் மூலதனம். பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்த படத்தில் உள்ள கேமராமேன், எடிட்டர் உட்பட அனை வரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள்’’ என்றார்.