இரட்டை வேடம்!

11 ஏப்ரல் 2019, 07:16 PM

ஆண்ட்ரியா, ‘தர­மணி’, ‘அவள்’, ‘விஸ்­வ­ரூ­பம் 2’, ‘வட­சென்னை’ போன்ற படங்­க­ளில் வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து நடித்­தார். தற்­போது ஆண்ட்ரியாவை வைத்து ‘தில்’ சத்யா இயக்­கிக் கொண்­டி­ருக்­கும் படம், ‘மாளிகை’. இந்த படத்­தில், அவர் காவல் துறை அதி­கா­ரி­யா­க­வும், கடந்த காலத்­தின் இள­வ­ர­சி­யா­க­வும் நடிக்க இருக்­கி­றார். படம்­கு­றித்து ‘தில்’ சத்யா அளித்­துள்ள பேட்­டி­யில், ‘‘ஆக் ஷன், பேன்­டசி, ஹாரர் என மூன்று ஜானர்­க­ளில் படம் தயா­ரா­கிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஆண்ட்ரியா நடிக்­கும் இள­வ­ரசி கதா­பாத்­தி­ரம், பேன்­டசி பகு­தி­யில் இடம்­பெ­றும். அது, 400 வரு­டங்­க­ளுக்கு முன்பு நடக்­கும் கதை. போலீ­சாக நடிக்­கும் ஆண்ட்ரியா, ஒரு மாளி­கைக்கு விசா­ர­ணைக்­கா­கச் செல்­கி­றார். அங்கு, அவ­ருக்கு கடந்த கால நினை­வு­கள் ஞாப­கத்­துக்கு வரு­வ­திலிருந்து படம் அப்­ப­டியே போகும்’’ என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார். கன்­னட நடி­கர் கார்த்­திக் ஜெய­ராம், இந்த படத்­தின் மூலம் தமி­ழில் அறி­மு­க­மா­கி­றார். மேலும், கே.எஸ். ரவி­கு­மார், மனோ பாலா, ‘ஜாங்­கிரி’ மது­மிதா போன்ற நடி­கர் – நடிகைகள் இதில் நடிக்­கி­றார்­கள். படத்­தின் டீசரை விஜய் ஆன்­டனி சமீ­பத்­தில் வெளி­யிட்டு வாழ்த்­தி­னார்.