ஆச்­ச­ரி­யம்!

11 ஏப்ரல் 2019, 07:14 PM

நந்தா நடிக்­கும் 'ழக­ரம்' படம் 10 லட்ச ருபா­யில் எடுக்­கப்­பட்­ட­தாக படத்­தின் இயக்­கு­நர் க்ரிஷ் கூறி­யுள்­ளார்.

கவா­கேன்ஸ் எழு­திய ‘புராஜக்ட்’ என்ற மர்ம நாவ­லைத் தழுவி எடுக்­கப்­பட்ட இப்­ப­டத்தை புது­முக இயக்­கு­நர் க்ரிஷ் இயக்­கி­யுள்­ளார். இப்­ப­டத்­தில் நந்தா, ஈடன், விஷ்ணு பரத், சந்­தி­ர­மோ­கன், மீனேஷ் கிருஷ்ணா உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர்.  ஜோ, பரத்­வாஜ், பிரின்ஸ் ஆகிய மூவர் ஒளிப்­ப­திவு செய்ய தரன் இசை­ய­மைத்­துள்­ளார்.

இப்­ப­டத்­தைப் பற்றி இயக்­கு­நர் க்ரிஷ் கூறு­கை­யில், "ஒரு புதை­ய­லைத் தேடி நான்கு பேர் செல்­லும் பய­ணமே கதை. சென்னை, விசா­கப்­பட்­டி­ணம், காஞ்­சி­பு­ரம், தஞ்­சா­வூர், கோயம்­புத்­தூர் என்று கதை பய­ணிக்­கி­றது. 10 லட்ச ரூபா­யில் ஒரு படம் எடுப்­பது சவா­லான விஷ­ய­மாக இருந்­தது. இதை சாத்­தி­யப்­ப­டுத்­தி­யது நந்­தா­வின் ஆத­ர­வு­தான். அவர் கொடுத்த ஊக்­கம் சாதா­ர­ண­மா­ன­தல்ல. நண்­பர்­கள் பலர் உத­வி­யு­டன் படம் உரு­வா­கி­யுள்­ளது'' என்­றார்.

ஹீரோக்­க­ளின் சம்­ப­ளமே கோடி­க­ளைத் தாண்­டும் தமிழ் திரை­யு­ல­கில் வெறும் 10 லட்ச ரூபா­யில் ஒரு படமே எடுக்­கப்­பட்­டுள்­ளது ரசி­கர்­கள் மத்­தி­யில் ஆச்­சரியத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.