தலைப்பாக்கிடாதீங்க!

11 ஏப்ரல் 2019, 07:11 PM

காமெடி நடி­கர் விவேக், கதை­யின் நாய­க­னாக நடித்­துள்ள படம் ‘வெள்­ளைப்­பூக்­கள்.’ அமெ­ரிக்­கா­வில் வாழும் தமி­ழர்­கள் இணைந்து உரு­வாக்கி உள்ள படம். இதனை விவேக் இளங்­கோ­வன் இயக்­கி­யுள்­ளார். ஜெரால்ட் பீட்­டர் ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார். ராம்­கோ­பால் கிருஷ்­ண­ராஜு இசை­ய­மைத்­துள்­ளார். திகா சேக­ரன், வருண் குமார் தயா­ரித்­துள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ருமே அமெ­ரிக்காவாழ் இளை­ஞர்­கள். இந்த படத்­தின் டீசர் மற்­றும் பாடல் வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடந்­தது. இதில் கலந்து கொண்டு விவேக் பேசி­ய­தா­வது:

‘‘இந்த படத்­தில் என்னை நடிக்க கேட்­ட­போது இந்த கேரக்­ட­ருக்கு சத்­ய­ராஜ்­தான் பொருத்­த­மா­ன­வ­ராக இருப்­பார் என்று சொன்­னேன். ஆனால் அவர் ஏற்கனவே இது மாதிரி கேரக்­டர்­க­ளில் நடித்து விட்­டார். இது­வரை நடிக்­காத ஒரு­வர்­தான் நடிக்க வேண்­டும் என்­றார்­கள். நானும் ஒப்­புக் கொண்டு நடித்­தேன். ஆனால் நான் ஹீரோ­வாக நடித்­தால் மட்­டும் அந்த படத்­திற்கு ஏதா­வது ஒரு பிரச்னை வந்து விடு­கி­றது. குறிப்­பாக நான் நடித்த படங்­க­ளி­லேயே எனக்கு பிடித்த பட­மான ‘நான்­தான் பாலா’ வெளி­வந்­த­போது கமல் நடித்த ‘பாப­நா­சம்’ பட­மும் வெளி­யாகி பெரும்­பா­லான தியேட்­டர்­களை ஆக்­கி­ர­மித்­தது. இத­னால் அந்த படம் நாச­மா­னது. அன்­புள்ள பத்­தி­ரிகை நண்­பர்­களே... இதையே தலைப்­பாக போட்டு விடா­தீர்­கள். இது தேர்­தல் நேரம் வேறு. கமல் சாருக்கு தெரிந்­தால் கோபித்­துக் கொள்­வார்’’ என காமெ­டி­யாக பேசி­னார்.