ஒரே வரி பதில்!

11 ஏப்ரல் 2019, 07:09 PM

‘அழ­கிய அசுரா,’ ‘சர­வ­ணன் இருக்க பயம் ஏன்,’ ‘ஜெமினி கணே­ச­னும் சுரு­ளி­ரா­ஜ­னும்,’ ‘சிலுக்­கு­வார்­பட்டி சிங்­கம்’ போன்ற படங்­க­ளில் நடித்­தி­ருப்­ப­வர் ரெஜினா.

தெலுங்கு படங்­க­ளி­லும் நடித்­தி­ருக்­கி­றார். கடந்த 2014ம் ஆண்டு ‘பில்லா நுவ்வு லேனி ஜீவி­தம்’ படத்­தில் சாய் தரம் தேஜுடன் இணைந்து நடித்­தார் ரெஜினா. திரை­யில் இரு­வ­ருக்­கும் காதல் காட்­சி­க­ளில் கெமிஸ்ட்ரி ஒர்க் – அவுட் ஆகி­யி­ருந்­த­தால் இரு­வ­ரும் நிஜ­மா­கவே காத­லிப்­ப­தால்­தான் அப்­படி நடிக்க முடிந்­தது என்று பேச்சு எழுந்­தது.

இது குறித்து சாய் தரம் தேஜி­டம் கேட்­ட­போது ஒரே வரி­யில் பதில் அளித்­தார். அவர் கூறும்­போது, ‘‘நானும் ரெஜி­னா­வும் உண்­மை­யான நண்­பர்­க­ளாக இருக்­கி­றோம்’’ என்­றார்.