அதி­ரடி!

09 ஏப்ரல் 2019, 06:56 PM

தனது தாய்­மொ­ழி­யான இந்தி சினி­மா­வில் சில படங்­க­ளில் நடித்த தமன்­னா­வுக்கு அந்த படங்­கள் வெற்­றியை கொடுக்­க­வில்லை. ஆனா­லும் இந்­தி­யில் மெகா நடி­கர்­க­ளு­டன் நடித்து மார்க்­கெட்டை பிடித்து விட­வேண்­டும் என்று அவ்­வப்­போது கூறி வரு­கி­றார். அந்த வகை­யில், சமீ­பத்­தில் என்னை மிக­வும் கவர்ந்த நடி­கர் ஹிருத்­திக் ரோஷன் என்று ஒரு பேட்­டி­யில் கூறிய தமன்னா, அவ­ரு­டன் முத்­தக்­காட்­சி­க­ளில் நடிக்க ஆர்­வ­மாக இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில் தமன்னா அளித்த பேட்டி ஒன்­றில் எந்த பாலி­வுட் நடி­க­ரு­டன் உங்­க­ளுக்கு டேட்­டிங் செல்ல ஆசை என கேட்­கப்­பட்­டது. இதற்கு சட்­டென்று நடி­கர் விக்கி கவு­சல் என கூறி­னார். விக்கி கவு­சல், சமீ­பத்­தில் வெளி­யான ‘உறி’ படத்­தில் ஹீரோ­வாக நடித்­த­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.